விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நந்திதா ஜெனிபர். 2000-ம் ஆண்டில் அர்ஜுன் நடித்த ரிதம் திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். திரைப்பட நடன இயக்குனர் சின்னாவின் மகள் தான் ஜெனிபர். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய முத்தம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதில் தனது நிஜப்பெயரான ஜெனிபர் என்ற பெயரில் அறிமுகமானார். முத்தம் திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில்தோல்வியை தழுவியது. அதன் பிறகு தனது பெயருக்கு முன்னால் நந்திதா என சேர்த்துக் கொண்டார். நிறைய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் ஜெனிபர். இவர் துணை ஒளிப்பதிவாளர் காசி விஸ்வநாதன் என்பவரை கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்குப் பிறகு சீரியல்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஜெனிபர். தற்போது விஜய் டிவி-யின் பாக்கியலட்சுமி, கலர்ஸ் தமிழின் அம்மன் ஆகிய தொடர்களிலும் நடித்து வருகிறார். ஜெனிபரின் இன்ஸ்டாகிராமை பார்த்தவர்கள் அவரை ஹீரோயினாக நடிக்கச் சொல்லி கோரிக்கை வைத்து வருகிறார்கள்.