இந்த சீரியலை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் ஏராளம். அதேபோல, ரசிகர்களின் பேராதரவை முக்கியமாக இல்லத்தரசிகளின் ஆதரவை பெற்ற மற்றொரு சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி சீரியல் தான். ஒளிபரப்பப்படுவதற்கு முன்பே எதிர்பார்ப்பை தூண்டிய இந்த சீரியல் வெளியான பிறகு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஜெனிபர் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமைடைந்த நடிகை தான் திவ்யா கணேஷ். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்வது வழக்கம். இதனால் அவருக்கு அதிக பாலோயர்கள் உள்ளனர். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களை கவர்ந்து விடும். இந்த நிலையில், இவர் மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். செம ஸ்டைலிஷாக இருக்கும் அந்த புகைப்படங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. திவ்யா ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். வழக்கறிஞர் ஆக வேண்டும் என சென்னை வந்த திவ்யா கணேஷுக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க தொடங்கினார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, சில ஆல்பங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு தான் அவருக்கு கலையின் மீது ஆர்வம் அவருக்கு அதிகரித்துள்ளது.
இவர் முதன்முதலாக புதுமணம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு சீரியலில் வில்லி பாத்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பிறகு, சன் டிவியில், சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற தொடரிலும் நடித்துள்ளார். சீரியல் மட்டுமின்றி ஜீவி பிராஷின் அடங்காதே, கண்ணாடி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.