மகளுடன் ஆல்யா மானசா விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்து வருபவர் ஆல்யா மானசா அடிப்படையில் டான்சரான ஆல்யா, ராஜா ராணி முதல் பாகத்தில் நடிகையாக அறிமுகமானார். செம்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அவர், தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு கடந்தாண்டு மார்ச் மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆல்யாவும் சஞ்சீவும் தங்கள் மகளுக்கு அய்லா சையத் எனப் பெயரிட்டனர். தற்போது அய்லாவுக்கு முதல் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட கலர்ஃபுல் படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஆல்யா மானசா. படங்களில் பொம்மை போலவே க்யூட்டாக இருக்கிறார் அய்லா. ப்ரீ வெட்டிங் போல ப்ரீ பர்த்டே ஷூட்டையும் தங்கள் மகளுக்காக நடத்தியிருக்கிறார்கள் ஆல்யா சஞ்சீவ் தம்பதியினர். தற்போது ராஜா ராணி 2-ல் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஆல்யா மானசா. அதே நேரத்தில் காற்றின் மொழி சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் சஞ்சீவ்.