மகளிர் தினத்தையொட்டி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி,பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட க்ரைம் த்ரில்லரான கன்னித்தீவு திரைப்படத்தை மார்ச் 8, 2023 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கலர்ஸ் தமிழில் நேரடி தொலைக்காட்சி பிரீமியராக ஒளிபரப்பாகிறது. வரலக்ஷ்மி சரத்குமார் நாயகியாக நடித்துள்ள இத்திரைப்படத்தில், அரசியல் மற்றும் சமூக உணர்களை நேர்த்தியாக வெளிகாட்டி பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளது.
சுந்தர் பாலு இயக்கி தயாரித்துள்ள இப்படத்தில் பிரபல நடிகர்களான சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, மொட்டா ராஜேந்திரன், லிவிங்ஸ்டன் மற்றும் ஆஷ்னா ஜவேரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிறு வயது முதல் நண்பர்களான மதி (வரலக்ஷ்மி சரத்குமார்), ஐஸ்வர்யா (ஐஸ்வர்யா தத்தா ), சுபிக்ஷா (சுபிக்ஷா) மற்றும் கனி (ஆஷ்னா ஜவேரி ) சமூக விரோத பிரச்னைக்கு எதிராக போராட முடிவு செய்கின்றனர். அதன் மூலம் நாட்டின் சில முக்கிய புள்ளிகளை பிரச்சினையில் மாட்டி விடுகின்றனர்.
இத்திரைப்படம் குறித்து இயக்குநர் சுந்தர் பாலு பேசுகையில், “கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேரடி தொலைக்காட்சி பிரீமியராக ஒளிபரப்பாகும் கன்னித்தீவு திரைப்படம் பார்வையாளர்கள் வீட்டிற்கு நேரடியாகச் சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாட, ஆக்ஷன் த்ரில்லர் கதைகளமான இத்திரைப்படம் அனைத்தும் பார்வையாளர்கள் நிச்சயமாக ரசிக்கக்கூடிய வகையில் இருக்கையின் நுனிக்கு கொண்டு செல்லும்.
இதுகுறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறுகையில், “தமிழ் சினிமாவில் பெண்களின் நடிப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் மிகவும் குறைவு. கன்னித்தீவு போன்ற ஒரு சுவாரசியமான படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் அனைத்து கலர்ஸ் தமிழ் நேயர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.