நீங்கள் யாருடைய மகன் என்ற கேள்விக்கு வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரி அளித்த பதில் கவனம் ஈர்த்து வருகிறது. தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ள வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். தனது தனிப்பட்ட வாழ்க்கையின் சர்ச்சைகளின் வழியாக இணையத்தில் ட்ரெண்டானார். வனிதாவுக்கு ஒரு மகனும் இரு மகள்களும் இருக்கிறார்கள். இருப்பினும் அவரது மகன் விஜய் ஸ்ரீஹரி, அவரது அப்பா ஆகாஷிடம் வளர்கிறார். இதற்கிடையே சமீபத்தில் ஸ்ரீஹரியின் பிறந்தநாள் சமீபத்தில் வந்தது. அப்போது தனது மகனை வாழ்த்தி பதிவிட்டிருந்தார் வனிதா. இன்ஸ்டகிராமில் ரசிகர் ஒருவர், நீங்கள் வனிதாவின் மகனா எனக் கேட்டிருந்தார். அதற்கு அவர், ஆகாஷின் மகன் என பதிலளித்திருந்தார்.