சமீப காலமாக வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கும் சீரியல்களுக்கும் மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.,. சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் சீக்கிரத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அவர்களின் நிஜ பெயர்களை விட சீரியல் கேரக்டர் பெயர்களை தான் ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர், சமூகவலைத்தளங்களிலும் அப்படியே அழைக்கின்றனர். உண்மையில் இப்படியொரு வரவேற்பு சின்னத்திரைக்கு கிடைப்பது வெள்ளித்திரை நடிகர் நடிகைகளையும் அன்னாந்து பார்க்க வைக்கிறது. சீரியல் என்றால் அது நெடுந்தொடர் தான். எபிசோடு எபிசோடாக 3 அல்லது 4 வருடம் வரை கூட ஒளிப்பரப்பாகு. அந்த சீரியலில் வரும் மாற்றங்கள், ட்விஸ்ட்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு ரசிகர்கள் விடாமல் தங்களுக்கு பிடித்த சீரியல்களை கண்டுக்களிக்கின்றனர். அந்த வகையில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த சீரியல்களில் 2021 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்த சீரியல்கள் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.
கொரோனா லாக்டனுக்கு பிறகு விஜய் டிவி 2 புதிய சீரியல்களை ஒளிபரப்பாக தொடக்கியது. அதில் ஒன்று பாக்கியலட்சுமி மற்றொன்று செந்தூரப்பூவே. நடிகர் ரஞ்சித் லீட் ரோலில் நடிக்க பெரும் எதிர்பார்ப்புகளுடன் சீரியல் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. ஃபேமலி டிராமா என்பதால் நல்ல ரேட்டிங்கிலும் சீரியல் சென்றது. இந்நிலையில் திடீரென்று 2 மாதங்களுக்கு முன்பு சீரியல் தற்காலிகமாக நிறுத்தப்ப்டுவதாக சீரியல் குழு அறிவித்தது. ஆனால் மீண்டும் டெலிகாஸ்ட் செய்யப்படும் என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. இதனால் ரசிகர்கள் பலரும் இந்த சீரியல் முடிந்து விட்டதாகவே முடிவு செய்து விட்டனர். ஒருவேளை பிக் பாஸுக்கு பிறகு மீண்டும் சீரியல் புதிய களத்துடன் ஒளிப்பரப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ரசிகர்களின் பேராதரவுடன் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் டி.ஆர்.பியில் கலக்கி வந்தது. மலர் ரோலில் பவித்ரா ஜனனி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சின்னத்திரையில் ஸ்ட்ராங்கான இடத்தை பெற்றார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிப்பரப்பான இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
ஜீ தமிழில் 4 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிப்பரப்பான சூப்பர் டூப்பர் ஹிட் சீரியலான யாரடி நீ மோகினி சீரியல் இந்த வருடம் நிறைவடைந்தது. முத்தரசன் ரோலில் ஆரம்பத்தில் சஞ்சீவ் நடித்து வந்தார். பின்பு ஸ்ரீ அந்த கதாபாத்திரத்தை நிரப்பினார். சின்னத்திரை வரலாற்றில் முதன்முறையாக இந்த சிரியலின் கிளைமேக்ஸை முடிவு செய்தவர்களே ரசிகர்கள் தான்.
சீரியல் தொடங்கிய முதல் நாளிலிருந்து மிகப் பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் காற்றின் மொழி. தந்தை பாசத்திற்காக ஏங்கும் பெண்ணின் கதை. மெளன ராகம் என்ற பெயரில் கன்னடத்தில் ஒளிப்பரப்பான சீரியலின் ரீமேக் தான் இந்த காற்றின் மொழி. சஞ்சீவ், பிரியங்கா லீட் ரோலில் நடிக்க டி.ஆர்.பியில் கலக்கி வந்த இந்த சீரியலுக்கு 2021 ஆண்டின் ஆரம்பத்தில் எண்டு கார்டு போடப்பட்டது.
ரவுடி பேபி சத்யா என்றால் சின்னத்திரை ரசிகர்கள் உற்சாகம் அடைந்து விடுவார்கள். அந்த அளவுக்கு ஜீ தமிழில் ஒளிப்பரப்பான சத்யா சீரியல் ரசிகர்களை ஈர்த்து இருந்தது. முதல் டாம் கேர்ள் ஹீரோயின் ரோலில் நடிகை ஆயிஷா சென்னை பாஷையில் கலக்கி இருப்பார். இந்த சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அதிருப்தியை வெளிப்படுத்தினர். அவர்களை சமாதானம் செய்ய சத்யா 2 சீரியலை சீரியல் குழு உடனே டெலிகாஸ்டுக்கு கொண்டு வந்தது