Home » photogallery » entertainment » TELEVISION TV MOVIES MAY 1ST SPECIAL MOVIES ON SUN TV VIJAY TV ZEE TAMIL COLORS TAMIL MAANADU VALIMAI ETHARKUM THUNINTHAVAN SRE
TV movies : மே தினம் ஸ்பெஷல் திரைப்படங்கள்... போட்டிப்போடும் அஜித், சூர்யா, சிம்பு!
TV movies may 1st : மே தினம் ஸ்பெஷலாக டிவி சேன்லகளில் வலிமை, எதற்கும் துணிந்தவன், மாநாடு, ரைட்டர் போன்ற படங்கள் டெலிகாஸ்ட் செய்யப்படுகின்றன.
மே தினம் ஸ்பெஷலாக இந்த ஆண்டு அஜித், சிம்பு, சூர்யா படங்கள் டிவி சேனல்களில் டெலிகாஸ்ட் செய்யப்படவுள்ளன. விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் புத்தும் புது படங்களை கண்டுகளித்து விடுமுறை தினத்தை கொண்டாடுங்கள்.
2/ 5
அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் வலிமை திரைப்படம், மே தினம் ஸ்பெஷலாக ஜீ தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகிறது. மாலை 6. 30 மணிக்கு ரசிகர்கள் படத்தை ஜீ தமிழ் சேனலில் பார்க்கலாம்.
3/ 5
நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளியான திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன் இந்த திரைப்படம் மே தினத்தன்று சன் டிவியில் மாலை 6. 30 மணிக்கு டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது.
4/ 5
சிம்புவுக்கு மிகச் சிறந்த கம்பேக்காக அமைந்த மாநாடு திரைப்படம் மே 1 அன்று விஜய் டிவியில் மதியம் 1. 30 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது.
5/ 5
இந்த ஆண்டின் மிகச் சிறந்த படம் என்று விமர்சனம் ரீதியாக பெயர் பெற்ற ரைட்டர் திரைப்படம் கலர்ஸ் தமிழ் சேனலில் மே தினத்தன்று மாலை 4. 30 மணிக்கு டெலிகாஸ்ட் செய்யப்படவுள்ளது.