பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டிருக்கின்றன. இதனால் குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக டிவி சேனல்கள் அவர்களை கவரும் படங்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை ஸ்பைடர் மேன் படங்கள் ஒளிபரப்பாகிறது. ஏப்ரல் 17 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 8.30க்கு ஸ்பைடர் மேன் படம் ஒளிபரப்பாகிறது. ஏப்ரல் 18 ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 8.30 மணிக்கு ஸ்பைடர் மேன் 2 படம் ஒளிபரப்பாகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி புதன் கிழமை 8.30 மணிக்கு ஸ்பைடர் மேன் 3 ஒளிபரப்பாகிறது. ஏப்ரல் 20 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு தி அமேசிங் ஸ்பைடர் மேன் படம் ஒளிபரப்பாகிறது. ஏப்ரல் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஸ்பைடர் மேன் ஹோம் கமிங் படம் ஒளிபரப்பாகிறது.