விஜய் டிவியில் சிப்பிக்குள் முத்து சீரியல் இந்த ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கியது. கதாநாயனாக ஆகாஷ் என்ற கதாபாத்திரத்தில் ஜெய் டிசோசா நடித்து வருகிறார். கதாநாயகியாக வாணி கதாபாத்திரத்தில் லாவன்யா நடித்து வருகிறார். லாவன்யா சென்னையை சேர்ந்தவர்.லாவன்யாவுக்கு 23 வயதாகிறது. மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் .2019ஆம் ஆண்டு குயின் மெட்ராஸ் டைட்டிலை வென்றுள்ளார். சூப்பர் குயின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். சிப்பிக்குள் முத்து சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் லாவன்யா நிஜத்தில் செம்ம மாடர்ன் ஆனவர். இவங்க தான் வாணி என்று சொன்னால் நம்ப முடிகிறதா!