நடிகை ஷிவானி நாராயணன் தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். இதற்கிடையே பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற ஷிவானி மீது ஒரு வித எதிர்பார்ப்பு இருந்தது. இறுதி வாரம் வரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தார். இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஷிவானி, அங்கு தனது கலர் ஃபுல்லான படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதோடு நடன வீடியோக்களையும் பகிர்ந்துக் கொள்கிறார். கரியரை பொறுத்தவரையில், சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். இதற்கிடையே தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் ஷிவானி. அதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.