சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் ஸ்ரீநிதி சுதர்சன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
2/ 9
தன் நண்பர்களுக்காக மது பானங்களை வாங்கும் வீடியோ தான் அது.
3/ 9
அந்த வீடியோவை பதிவிட்டிருக்கும் ஸ்ரீநிதி, ‘நான் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்ந்தேன். என்னை பின் தொடர்பவர்கள் நான் மீடியா என்பதால் என்னை பின் தொடரவில்லை நான் உண்மையாக இருப்பதால் தான்.
4/ 9
எனவே, சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும் அவர்கள் அதை மட்டும் தான் செய்வார்கள்.
5/ 9
எனக்கு எப்போதும் அன்பை மட்டுமே அளித்த தளத்தில் நான் மீண்டும் நானாக மாறத் தொடங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
6/ 9
அந்த வீடியோவுக்கு ரசிகர்களிடமிருந்து எதிர் வினைகள் குவிந்து வருகின்றன.
7/ 9
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இந்த ஸ்ரீநிதி.
8/ 9
யாரடி நீ மோகினி சீரியலில் நடித்திருந்த இவர் தற்போது புதுப்புது அர்த்தங்களில் நடித்து வருகிறார்.
9/ 9
சமீபத்தில் வலிமை படத்தைப் பார்த்து விட்டு ஸ்ரீநிதி சொன்ன விமர்சனமும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.