எதிர்பார்த்த வெற்றியை சினிமா கொடுக்கவில்லை என்றாலும், சின்னத்திரை நன்றாகவே கை கொடுத்தது. பிரபல சோப், நெய் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். பின்னர் 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகள்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் ’சந்திரலேகா’, தொடரில் நடித்தார். இத்தொடர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடி சமீபத்தில் நிறைவடைந்தது.