சீரியல் நடிகை நக்ஷத்ரா விஸ்வநாதன் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா ஹிட் தொடரான 'யாரடி நீ மோகினி' சீரியலில் வெண்ணிலாவாக நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை நட்சத்திரா. சில மாதங்களுக்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றி வரும் விஷ்வா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நக்ஷத்ரா. மலையாள முறைப்படி அவர்களது திருமணம் சிம்பிளாக நடந்தது. நட்சத்திராவின் தாத்தா உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் அவசர அவசரமாக திருமணம் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. திருமணத்துக்குப் பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் நக்ஷத்ரா. இந்நிலையில் தற்போது அவர் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ”சிறந்தது இன்னும் வரவில்லை” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.