நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்தவர் ரோஷினி ஹரிப்ரியன். அந்த கதாபாத்திரம் ரோஷினிக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. அந்த நேரத்தில் திடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார் ரோஷினி ஹரிப்ரியன். பின்னர் குக் வித் கோமாளி 3 மூலம் மீண்டும் விஜய் டிவி-க்கு திரும்பினார். டைட்டிலை வெல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அதிலிருந்து எலிமினேட் ஆனார். தற்போது விளம்பரங்களிலும், மியூசிக் வீடியோக்களிலும் நடித்து வரும் அவர் தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.