தான் செல்லம்மா சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரியப்படுத்தியிருக்கிறார் நடிகை திவ்யா கணேஷ். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ். சன் டிவி-யில் ஒளிபரப்பான, ‘கேளடி கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையான இவர், அதன் பிறகு சுமங்கலி, மகராசி ஆகிய சீரியல்களிலும் நடித்தார். ராமநாதபுரத்து பெண்ணான திவ்யா, வளர்ந்தது படித்தது எல்லாம் அங்கு தான். சட்டம் படிக்க சென்னை வந்த திவ்யாவுக்கு எதேச்சயாக சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு பாக்யலட்சுமி சீரியலின் ஜெனி கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்று தந்துள்ளது. அதோடு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் செல்லம்மா சீரியலில் மேகா என்ற முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். இதற்கிடையே சமீபத்தில் அந்த சீரியலை விட்டு விலகினார். பதான் படத்தை உங்கள் மகளுடன் பாருங்கள் - ஷாருக்கானுக்கு பாஜக சபாநாயகர் கிரீஷ் கெளதம் சவால் இந்நிலையில் தற்போது அது குறித்து பேசியுள்ள திவ்யா, “மேகா கேரக்டரை மிகவும் விரும்பி தான் ஏற்றுக் கொண்டேன். இதுவரைக்கும் நான் நடித்த எல்லா சீரியல்களிலும் சாஃப்ட்டான கேரக்டரில் நடித்ததால், நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தான் இந்த கேரக்டரில் நடித்து வந்தேன். ஆனால் அங்கே ஒரு சிலர் என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் நான் இந்த சீரியலை விட்டு வெளியேறுவதற்கு காரணம் என்னுடைய சொந்த பிரச்சனை என்று சொல்லும்படி சிலர் கூறினார்கள். ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன். என்னுடைய சொந்த விஷயத்தினால் நான் வெளியேறவில்லை. என்னை அங்கே சிலர் வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்வதால் தான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.