என் வாழ்க்கையின் 8-வது அதிசயம் எனது மனைவி தான் என ரவீந்தர் சந்திரசேகரன் தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
2/ 8
சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கியவர் மகாலட்சுமி. 90’ஸ் கிட்ஸ் பலரின் கிரஷ்ஷாக வலம் வந்த இவர், பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
3/ 8
இவருக்கு அனில் என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர்.
4/ 8
பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
5/ 8
முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததையடுத்து, ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணமாக அமைந்தது.
6/ 8
திருமணத்துக்குப் பிறகு இருவரும் தங்கள் காதலை அடிக்கடி இன்ஸ்டகிராமில் படம் வெளியிட்டு தெரிவித்து வருகின்றனர்.
7/ 8
அந்த வகையில் புதிய படமொன்றை வெளியிட்ட ரவீந்தர், “என் வாழ்க்கையின் 8-வது அதிசயம் எனது மனைவி” எனப் பதிவிட்டுள்ளார்.
8/ 8
அதற்கு, “யார் என்ன சொன்னாலும், என் இதயம் துடிக்கும் வரை நான் உன்னை நேசிப்பேன். நீ இல்லாமல் நான் இல்லை... நீ தான் என் எல்லாம்” என பதிலளித்திருக்கிறார் மகாலட்சுமி.