காபி பூக்களுடன் தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி ’சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சில மாதங்கள் முன்பு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் தமிழ் 6' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். ஆர்வத்துடன் விளையாடிய அவர், 91-வது நாளில் வெளியேறினார். அப்போது ரசிகர்கள் மட்டுமல்ல, சக போட்டியாளர்களின் இதயங்களையும் வென்றார். 'பிக் பாஸ் 6' நிகழ்ச்சியில் ரச்சிதா அவரது விளையாட்டுத் திறமைக்காகப் பாராட்டப்பட்டார். பின்னர் ஷிவினுடன் இணைந்து ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று வந்தார். இந்நிலையில் தற்போது தனது புதிய படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் ரச்சிதா. அதில், எத்தனைப் பேருக்கு தெரியும்? இது காபி செடியிலிருந்து வரும் பூக்கள் என்று? எனக் கேட்டுள்ளார். அந்தப் படங்கள் தற்போது லைக்ஸை குவித்து வருகின்றன.