முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » Puthandu 2023: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொலைக்காட்சியில் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

Puthandu 2023: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொலைக்காட்சியில் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

puthandu 2023: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உங்கள் அபிமான சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ், கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள் ஒரு தொகுப்பு.

 • News18
 • 15

  Puthandu 2023: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொலைக்காட்சியில் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

  நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியானது. இயக்குநர் வம்சி இயக்கிய இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இதில் நாயகியாக ராஷ்மிகா நடித்த சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ், சங்கீதா உள்ளிட்டோர் முன்னணி பாத்திரங்களில் நடித்தனர். இந்நிலையில் தமிழ் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் இப்படம் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

  MORE
  GALLERIES

 • 25

  Puthandu 2023: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொலைக்காட்சியில் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

  உன்னி முகுந்தன், சிறுமி தேவநந்தா, மனோஜ் கே.ஜெயன், சம்பத் ராம் உட்பட பலர் நடித்து மலையாளத்தில் வெற்றி பெற்ற படம், ‘மாளிகப்புரம்’. விஷ்ணு சசி சங்கர் இயக்கிய இந்தப் படம்  தமிழ் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் இப்படம் மதியம் 2:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

  MORE
  GALLERIES

 • 35

  Puthandu 2023: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொலைக்காட்சியில் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

  கன்னட சினிமாத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் ரக்சித் ஷெட்டி. இவரது நடிப்பில் பல வித்தியாசமான படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் கடந்த ஆண்டு 777 சார்லி என்ற படம் ரக்சித் ஷெட்டியின் நடிப்பில், கிரண் ராஜ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. தமிழிலும் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் கிடைத்தது. இந்நிலையில் இந்தப் படம்  தமிழ் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இப்படம் மாலை 4:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

  MORE
  GALLERIES

 • 45

  Puthandu 2023: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொலைக்காட்சியில் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

  நடிகர் ஆடுகளம் முருகதாஸ், பேபி பிரித்திக்ஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உலகளாவிய பந்தத்தை கொண்டாடும் வகையில் உள்ளது ராஜாமகள் படம். ஹென்றி ஐ எழுதி இயக்கிய இந்த படத்தில் நடிகை வெலினா மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மூன்வாக் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது, ஷங்கர் ரங்கராஜன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.  தமிழ் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இப்படம் மதியம் 2:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

  MORE
  GALLERIES

 • 55

  Puthandu 2023: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொலைக்காட்சியில் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

  நடிகர் ஆர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை.  அந்த திரைப்படம் கொரோனா காரணமாக நேரடியாக அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனைவு திரைக்கதை மூலமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், இன்றளவும் பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் படம்  தமிழ் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இப்படம் காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

  MORE
  GALLERIES