பின்னர் சன் டிவி-யில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் நடித்தார். திரைப்படங்களின் மூலம் கிடைக்காத பேரும் புகழும் ரோஜாவால் பிரியங்காவுக்குக் கிடைத்தது. இந்த சீரியல் மூலம் இவர் 2 முறை சன் டிவி குடும்ப விருதுகளையும் வாங்கியுள்ளார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலில் நடித்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நேர்க்காணல் ஒன்றில் பேசிய பிரியங்கா, “ராகுல்ங்கிற கிட்டுவுக்கும் எனக்கும் 2018-ஆம் வருஷம், மே மாசம் 10-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. நான் செல்லமா அவரை 'கிட்டுலூ'ன்னு தான் கூப்பிடுவேன். தெலுங்கு சினிமாவுலயும் சரி டி.வி-யிலயும் சரி, அவர் முகம் பரிச்சயம். பரஸ்பரம் ரெண்டு பேரும் லவ் பண்ணினோம்.
அதனால, 'எனக்கு இந்த ஃபீல்டே வேண்டாம்'னு கோபிச்சுட்டு மலேசியா போய், அங்க ஒரு நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்துட்டார். என் கிட்ட பேசாம என் ஃபோனையும் எடுக்க மாட்டேங்குறார். இந்த பிரச்னை எல்லாம் சீக்கிரம் சரியாகணும்ன்னு கடவுளை வேண்டிட்டு இருக்கேன்” எனத் தெரிவித்திருந்தார். 5 வருடங்களுக்குப் பிறகு ஒருவழியாக ராகுலை மணந்துள்ளார் பிரியங்கா. இவர்களது திருமணம் மலேசியா முருகன் கோயிலில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.