பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியதர்ஷினி, நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்ட படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பிரியதர்ஷினியின் தங்கை டிடி, சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருப்பவர். அடிக்கடி விடுமுறை சென்று அந்தப் படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிடுவார். 1984 ஆம் ஆண்டு கே.பாக்யராஜின் தாவணி கனவுகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரியதர்ஷினி. பின்னர் அவர் 'காவல் கைதிகள்', 'நாகம்', 'குற்றவாளிகள்', 'இதய கோவில்', 'உயிரே உனக்காக' மற்றும் 'இதயத்தை திருடதே' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தேர்ந்த நடனக் கலைஞரான பிரியதர்ஷினி, மானாட மயிலாட நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார். தற்போது சன் டிவி-யின் எதிர்நீச்சல் சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 44 வயதாகும் பிரியதர்ஷினி, தற்போது நீச்சல் குளத்தில் இருக்கும் படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.