பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் சேலையில் விதவிதமாக எடுத்துக் கொண்ட படங்களை அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகை சுஜிதா தனுஷ். கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், விளம்பர படங்களை தயாரிக்கும் தனுஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வசித்து வருகிறார். கைக்குழந்தையாக இருந்தபோதே முந்தானை முடிச்சு படத்தில் நடித்த சுஜிதா தொடர்ந்து பல படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வந்த இவர், சின்னத்திரையிலும் நுழைந்தார். தமிழ் மட்டுமல்லாது பிற மொழி தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்த சுஜிதா தனுஷ், 40-க்கும் அதிகமான சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவி-யின் பாண்டியன் ஸ்டோர்ஸ், ஜெமினி டிவி-யின் கீதாஞ்சலி ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் சேலையில் தான் எடுத்துக் கொண்ட விதவிதமான படங்களை பகிர்ந்துள்ளார்.