சின்னத்திரை பிரபலங்கள் கண்மணி சேகர் - நவீன் இருவரும் ஷிம்லாவில் தாங்கள் எழுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளனர். முன்னணி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர் கண்மணி சேகர். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலில் ஹீரோவாக நடித்தவர் நவீன். தற்போது அவர் அதே தொலைக்காட்சியில் கண்ட நாள் முதல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். கண்மணியும் நவீனும் காதலில் இருப்பதாக இன்ஸ்டகிராமில் அறிவித்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு வாழ்த்துகள் குவியத் தொடங்கின. இதையடுத்து கடந்த மாதம் இவர்களின் திருமணம் நடந்தது. அதன் பின்னர் ஹனி மூனுக்காக வட இந்தியா சென்ற அவர்கள் விதவிதமான படங்களை பதிவிட்டு வருகின்றனர்.