மைனா நந்தினி - யோகேஸ்வரன் விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை மைனா நந்தினி. சில படங்களிலும் நடித்துள்ள மைனா, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார். மைனாவின் முதல் கணவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், பின்னர் சீரியல் நடிகர் யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். கடந்த ஆண்டு மைனா நந்தினிக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. சின்ன இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க வந்து விட்டார் மைனா. தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியிலும் இவர்கள் கலந்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் மைனா நந்தினி - யோகேஸ்வரன் தம்பதியினர் வித்தியாசமான முறையில் கப்பிள் ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர். அந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.