பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பிக் பாஸ் தாமரைச்செல்விக்கு புதிதாக வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
2/ 8
பிக்பாஸ் தாமரை செல்வி ஒரு தெரு கூத்து கலைஞர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். பின்னர் சிம்பு தொகுத்து வழங்கிய பிக் பாஸ் OTT பதிப்பிலும் பங்கேற்றார்.
3/ 8
பின் தங்கிய குடும்பத்திலிருந்து வந்த தாமரை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட தனது பிரச்சனைகளைப் பற்றி பேசினார்.
4/ 8
தாமரையின் குடும்பம் வசிக்க நல்ல இடம் இல்லை என்பதை அறிந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், அவருக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.
5/ 8
ஒரு நேர்காணலில், வீடு கட்டும் திட்டத்திற்கு நன்கொடை அளிக்க தாமரையின் ரசிகர்கள் முன் வரும்படி கேட்டுக் கொண்டார் ஜேம்ஸ்.
6/ 8
லோட்டஸ் ஹவுஸின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் அது தாமரையின் குடும்பத்தாரிடம் அளிக்கப்படும் எனவும் வசந்தன் மேலும் தெரிவித்தார்.
7/ 8
இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8/ 8
இதற்கிடையே பிக் பாஸ் அனிதா சம்பத் சமீபத்தில் புதிய வீட்டில் குடியேறியது குறிப்பிடத்தக்கது.