விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் மெளனராகம் 2 சீரியலில் சக்தி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரவீனா தாஹா. இயக்குநர் நேசன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ’ராட்சசன்’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தவிர, ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் நடித்துள்ளார். நடிப்பதோடு, நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சி என பலவற்றிலும் கலந்துக் கொண்டு தன் திறமையை காண்பித்து வருகிறார். அக்டோபர் 10, 2002 சென்னையில் பிறந்தார் ரவீனா தாஹா. ’கதை சொல்லப் போறோம்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். டான்ஸ் ஆடுவது, இசை கேட்பது, செல்லப்பிராணிகளை வளர்ப்பதும் தான் ரவீனாவின் பொழுதுபோக்கு விஷயங்களாம். அதோடு விதவிதமாக டிரஸ் பண்ணிக் கொள்ளவும் ரவீனாவுக்கு பிடிக்குமாம். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது லேட்டஸ்ட் படங்களை வெளியிட்டுள்ளார்.