இது பணத்திற்காக நடந்த திருமணம் என மகாலட்சுமியை வசைபாடினர். தயாரிப்பாளர் ரவீந்தர் படத்தில் மகாலட்சுமி நடித்து வருவதால் அவரின் பணத்திற்காக தான் மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக பேச தொடங்கினர். ரவீந்தரையும் விட்டு வைக்கவில்லை அவரை உருவகேலி செய்து சில மோசமான கருத்துக்களை பதிவு செய்து இருந்தனர்.
திருமணம் முடிந்த கையோடு இருவரும் இந்த திருமணத்தை பற்றி தெளிவாக விளக்கி எல்லா யூடியூப் சேனல்கள், நியூஸ் சேனல்களுக்கும் பேட்டி அளித்தனர். அதன் பின்பு பலருக்கும் இந்த திருமணம் குறித்த புரிதல்கள் தெளிவாகின. இருந்த போதும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இன்ஸ்டாவில் ஷேர் செய்யும் ரொமான்டிக் புகைப்படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் குறைந்த பாடில்லை.
ரசிகர்களுடன் 2 நிமிடம் பேசி மகாலட்சுமி இனிமேல் ரவீந்தரை உருவகேலி செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்தார். ரவீந்தரை மட்டுமில்லை ஆண்கள்,பெண்கள். , குழந்தைகள் என யாரையும் உருவக்கேலி செய்யாதீர்கள் என சோஷியல் மெசேஜ் கொடுத்தார். அதன் பின்பு எங்கள் திருமணத்தை விமர்சிப்பவர்களுக்கு ஒரே பதில் நாங்கள் வாழ்ந்து காட்றது தான். நிச்சயம் வாழ்ந்து காட்டுவோம் என கூறி லைவில் இருந்து சென்றார்.