செய்தி வாசிப்பாளர் கண்மணி - நவீன் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
2/ 9
சன் டிவி செய்தி வாசிப்பாளரான கண்மணி சேகர் - சீரியல் நடிகர் நவீன் குமார் திருமணம் கடந்த ஜூன் 10 ஆம் தேதி நடைப்பெற்றது.
3/ 9
இவர்களின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே இது காதல் திருமணமா? அரேஜ் மேரேஜா? என தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
4/ 9
கடைசியில் இது பெரியவர்களால் பார்த்து முடிக்கப்பட்ட திருமணம் என்று கண்மணி சேகர் அறிவித்தார்.
5/ 9
இந்நிலையில் நவீன் தனது இன்ஸ்டாகிராமில் முதல் முறையாக திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கலந்த தகவலாக இருந்தது.
6/ 9
அதன் பின்பு கண்மணி - நவீன் ஜோடியை ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். இவர்களின் நிச்சயதார்த்தமும் சிறப்பாக நடைப்பெற்றது.
7/ 9
இந்நிலையில் பெரியவர்களின் ஆசியுடன் திருமணம் கடந்த 10 ஆம் தேதி நடந்து முடிந்தது. சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவர்களது திருமணத்துக்கு நேரில் சென்று வாழ்த்துக்களை பரிமாறி இருந்தனர்.
8/ 9
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
9/ 9
தற்போது இணையத்தில் நவீன் - கண்மணி திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் தாலி கட்டும் நேரத்தில் சந்தோஷத்தில் கண்மணி ஆனந்த கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். இந்த புகைப்படம் கண்மணி - நவீன் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.