தமிழ் டிவி ரசிகர்கள் ஆர்வமுடன் பார்க்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் சேனல்களில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகின்றன சீரியல்கள். மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து கொண்டிருக்கும் பல முன்னணி சேனல்களில் சீரியல்கள் தவறாமல் இடம் பிடித்து உள்ளன
அந்த வகையில் திங்கள் - சனி வரை இரவு 8 முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் குடும்ப சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தமிழகத்தில் இந்த சீரியலை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்னும் அளவிற்கு மிகவும் பிரபலமான சீரியலாக திகழ்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த விஜே சித்ராவின் மறைவிற்கு பிறகு, இந்த சீரியலை பார்க்க துவங்கியவர்கள் ஏராளம்.
இறந்த பின்னும் இந்த சீரியலுக்கு சித்ரா லட்சக்கணக்கான புதிய ரசிகர்களை பெற்று தந்தார் என்பது தான் உண்மை. தற்போது சித்ரா நடித்த முல்லை கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை காவ்யா அறிவுமணி. தனது இயல்பான நடிப்பால் சித்ரா இல்லாத குறையை சில வாரங்களிலேயே போக்கி மக்கள் மனதில் முல்லையாக பதிந்து விட்டார் காவ்யா.
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவ்யா, பாண்டியன் ஸ்டோர்ஸில் இப்போது முல்லை கேரக்டரில் நன்றாக செட்டாகி விட்டார். பிற விஜய் டிவி பிரபலங்களை போலவே நடிகை காவ்யா அறிவுமணிக்கும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். மக்களிடையே பிரபலமாக உள்ள இவர் மாஸ்டர் மகேந்திரனுடன் "ரிப்புபரி" என்ற படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து பின்ணணியில் த்ரில் கலந்த காமெடி படமாக ரிப்புபரி உருவாக்கி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் முல்லை (காவ்யா அறிவுமணி) பிறந்தநாளை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கொண்டாடி உள்ளனர். இது தொடர்பான போட்டோக்கள் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வைரல் போட்டோவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் நடிகை காவ்யாவிற்கு கேக் ஊட்டி விடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.