ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய மாற்றம்! தீயாய் பரவும் தகவல்

காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய மாற்றம்! தீயாய் பரவும் தகவல்

காற்றுக்கென்ன வேலி சீரியலின் இயக்குனர் மாற்றப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

 • 16

  காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய மாற்றம்! தீயாய் பரவும் தகவல்

  சின்னத்திரை சீரியல்களில் தற்போது கல்லூரி வாழ்க்கை சார்ந்த ஒரு தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் அது காற்றுக்கென்ன வேலி சீரியல் தான். இந்த சீரியல் கல்லூரி கதைக்களத்தோடு அமைந்திருந்தாலும் காதல், சண்டை என வாழ்க்கையின் முக்கிய பரிமாணங்களை இளமை ததும்ப எடுத்துரைத்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 26

  காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய மாற்றம்! தீயாய் பரவும் தகவல்

  இந்த சீரியலில் அப்பாவை எதிர்த்து ஆசிரியையின் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வெண்ணிலா என்ற பெண் காலப்போக்கில் கல்லூரி பேராசிரியர் சூர்யாவை காதலிக்க துவங்குகிறார். இவர்களது காதல் கை கூடுமா என்பதன் பின்னணியை வைத்து இந்த ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

  MORE
  GALLERIES

 • 36

  காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய மாற்றம்! தீயாய் பரவும் தகவல்

  ஏற்கனவே வெண்ணிலா மற்றும் சூர்யா ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தர்ஷனின் விலகலுக்கு பின்பு சூர்யா கதாப்பாத்திரத்தில் சுவாமிநாதன் அனந்தராமன் நடித்து வருகிறார். அவர் இதற்கு முன் மிதுன ராசி சீரியலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கன்னட சினிமாவிலும் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 46

  காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய மாற்றம்! தீயாய் பரவும் தகவல்

  இந்நிலையில் தற்போது இந்த சீரியல் குறித்து புத்தம் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது காற்றுக்கென்ன வேலி சீரியலின் இயக்குனர் மாற்றப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. புது இயக்குனருடன் வென்னிலா மற்றும் சூர்யா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 56

  காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய மாற்றம்! தீயாய் பரவும் தகவல்

  இதுக் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை, அதே போல் இந்த புது இயக்குனர் ஏற்கெனவே பல சீரியல்களை இயக்கியுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் தாலாட்டு சீரியலின் முன்னாள் இயக்குனரும் இவர் தான். சன் டிவியில் ஒளிப்பரப்பான பிரியமானவள சீரியலிலும் இவர் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 66

  காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய மாற்றம்! தீயாய் பரவும் தகவல்

  சமீபத்தில் இந்த சீரியலுக்கு விஜய் டிவி டெலிவிஷன் அவார்டில் ஒரு விருது கூட வழங்காமல் போனதற்கு ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து இருந்தனர். குறிப்பாக இந்த சீரியலுக்கு இளைஞர்கள் ஃபேன்ஸ் கூட்டம் அதிகம்.

  MORE
  GALLERIES