பல மாதங்கள் காத்திருந்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் 5 சீசன் தொடங்கியது. இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை புகழ் இமான் அண்ணாச்சியும் கலந்து கொண்டுள்ளார். வெள்ளந்தி குணம் கொண்ட இமான் அண்ணாச்சி 18 வருட போராட்டத்திற்கு பிறகு இந்த இடத்தை அடைந்துள்ளார். இவரின் சொந்த ஊர் . சினிமா மீது கொண்ட ஆசையால் மஞ்சப்பையை எடுத்துக்கொண்டு இளம் வயதிலேயே க்கு வந்து விட்டார் இமானுவேல்.
சென்னைக்கு வந்த பின்பு தான் அவருக்கு தெரிந்தது சினிமா வாய்ப்பு அவ்வளவு ஈஸியாக கிடைக்காது என்று. பசி கொடுமையால் தற்சமயம் ஏதாவது வேலை கிடைத்தால் போதும் என எண்ணியவர் இங்குள்ள மளிகை ஒன்றில் வேலைக்கு சேர்ந்து அதில் வரும் வருமானத்தை குடும்பத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார். பகலில் வேலை முடித்திவிட்டு இரவு நேரத்தில் பனகல் பார்க்கில் படுத்து உறங்கி பல கஷ்டங்களை அனுவித்து இருக்கிறார். ஆனாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற வெறி மட்டும் அவரை விட்டு போகாமல் இருந்துள்ளது.
சினிமாவில் நுழைய பல வருடம் போராடி இருக்கிறார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு கலக்கப்போவது யாரு சீசன் 1ல் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனாலும் அந்த வாய்ப்பை வறுமையால் தவறவிட்டார். பின்பு லோக்கல் சேனலில் அவருக்கு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி நல்ல பெயரை வாங்கி கொடுக்க 40 வயதில் இமான் அண்ணாச்சி வாழ்க்கையையே சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ நிகழ்ச்சி மாற்றியது.
அதைத்தொடர்ந்து சுட்டி குட்டீஸ் நிகழ்ச்சியில் ஆங்கரானர் இமான் அண்ணாச்சி. அடுத்தடுத்த வாய்ப்புகள் வர சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். மரியான் படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து நடித்தார். பின்பு தனக்கென தனி அடையாளத்தை தற்போது பிடித்து கொண்டார். காலத்தில் பல்வேறு உதவிகளையும் செய்தார். தம்மால் முடிந்த அளவு சாப்பாடு பொட்டலங்களை கொரோனா காலத்தில் வழங்கி சமூக பணிகளில் ஈடுப்பட்டார்.
தற்போது பிக் பாஸ் 5ல் தன்னுடைய நகைச்சுவை திறமையால் வீட்டில் இருப்பவர்களையும் ரசிகர்களையும் அண்ணாச்சி சிரிக்க வைக்கிறார். முதல் நாள் பிக் பாஸ் வீட்டுக்குள் இமான் அண்ணாச்சி செல்வதற்கு முன்பு கமலிடம் “ எனக்கு 40 வயதுக்கு பின்னர் தான் வாழ்க்கையே துவங்கியது. நான் குட்டீஸ்களை கையால்வது போலவே பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களையும் கையாளுவேன். பிக்பாஸ் வீட்டுக்குள் போனால் பெயர் கெட்டுப் போயிடும் எதுக்கு என்று பல பேர் சொன்னார்கள். அதிலும் சில பேர் அங்கே போனால் தங்களை யார் என்று புரிந்து கொள்ளலாம் என்று சொன்னார்கள். நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எல்லாரையும் சிரிக்க வைக்க வேண்டும்.ட்டிற்குள்ளேயும் நான் எல்லோரையும் சிரிக்க வைப்பேன்” என்று கூறினார்.