அன்னையர் தினத்தை முன்னிட்டு மகனுடன் எடுத்துக் கொண்டப் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் டாக்டர் வெண்பா என்ற வேடத்தில் நடிக்கும் ஃபரினா ஆசாத், தான் விரும்பும் பாரதியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல வில்லத்தனங்களை செய்து வருகிறார். பாரதியும் கண்ணம்மாவும் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்திருப்பதற்கு வெண்பாவாக நடிக்கும் ஃபரீனாவே காரணம். இதில் வெண்பாவாக நடித்து வருபவர் டிவி தொகுப்பாளினியாக இருந்து நடிகையான ஃபரீனா ஆசாத். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே குழந்தையின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டார். இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு, தனது மகனுடன் எடுத்துக் கொண்ட அட்டகாச படங்களை வெளியிட்டுள்ளார் ஃபரீனா.