கணேஷ் வெங்கட்ராம் மும்பையில் பிறந்து வளர்ந்தார். இவரின் அப்பா அம்மா தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தைச் சேர்ந்தவர்கள். இவர் 2003ம் ஆண்டு நடந்த "மிஸ்டர் இந்தியா 2003" வெற்றியாளர் ஆவார். கணேஷ் வெங்கட்ராம் அபியும் நானும் மற்றும் உன்னைப்போல் ஒருவன் போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பரிச்சயமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்தார். இவர் கமலஹாசன், அமிதாப் பச்சன், மோகன்லால், போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.
இவருக்கும் நிஷா கிருஷ்ணன் என்ற நடிகையுடன் 22 நவம்பர் 2015 அன்று திருமணம் நடைபெற்றது. கணேஷ் வெங்கட்ராம் மற்றும் நிஷா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான ஜோடியான இவர்களுக்கு சமூக வலைதளங்களிலும் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த அழகான ஜோடி தங்கள் பெண் குழந்தையின் இரண்டாவது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்கள்.
மாடலாக அறிமுகமாகி, தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளாராகி, பின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவர் கணேஷ் வெங்கட்ராமன். நிஷாவும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளாராக அறிமுகமானவர். பின்னர் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரமாகவும், நாயகியாகவும் நடித்து வந்தார். நீண்ட காலமாக காதலித்து வந்த இவர்கள், இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து, அழகான குழந்தைக்கும் பெற்றோராகி உள்ளனர்.
இந்த அழகான ஜோடிக்கு 2019 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சமைரா என்று பெயரிட்டனர். ஜூன் 29 அன்று கணேஷும் நிஷாவும் சமைராவின் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். கணேஷ் இரண்டு வருடங்களாக எடுத்த தன் மகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒன்றிணைத்து ஒரு கியூட்டான வீடியோவை நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்தார். அது மட்டுமின்றி, கணேஷும் நிஷாவும், சமைராவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.
இந்த ஜோடி பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. புகைப்படங்களைப் பகிர்ந்த கணேஷ் “எங்களின் குட்டி தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், உங்கள் அனைவருடைய அன்பான மெசேஜ்களுக்கும் நன்றி. எங்கள் அபார்ட்மென்ட்டில், சமைராவின் நண்பர்களுடன் சின்ன அளவில் பிறந்த நாள் கொண்டாடினோம். மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தோம்” என்றும் தெரிவித்தார்.
“வாழ்த்திய அனைவருக்கும் நன்றி! பிறந்தநாள் கொண்டாட்டங்களை எங்களின் குடும்பத்தோடும், அப்பார்ட்மென்ட்டில் இருக்கும் சமைராவின் குட்டி நண்பர்களோடும் சிறப்பாகக் கொண்டாடினோம்" என்று நிஷா தெரிவித்தார். அதுமட்டுமின்றி, பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஆடை, கேக் மற்றும் டெக்கரேஷன் ஆகியவற்றுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.