விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ். சன் டிவி-யில் ஒளிபரப்பான, ‘கேளடி கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையான திவ்யா, அதன் பிறகு சுமங்கலி, மகராசி ஆகிய சீரியல்களிலும் நடித்தார். ராமநாதபுரத்து பெண்ணான திவ்யா, வளர்ந்தது படித்தது எல்லாம் அங்கு தான். சட்டம் படிக்க சென்னை வந்த திவ்யாவுக்கு எதேச்சயாக சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேக்கப் பொருட்கள் வாங்குவதில் அலாதி பிரியம் காட்டுவாராம் திவ்யா. நிறைய மேக்கப் போட்டுக்கொண்டாலும், அது மைல்டாக தெரியும்படி தனக்கென ஒரு டிரிக்ஸை வைத்திருக்கிறாராம். தவிர, மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு திவ்யாவுக்கு கிடைத்திருக்கிறது. தமிழ் படங்களில் நடிப்பதே, அவரது கனவாம்.