முன்னணி கதாபாத்திரங்களில் ஒன்றான வசு, டைட்டில் ரோலில் நடிக்கும் சரஸ்வதியையே ஓவர்டேக் செய்து, ரசிகர்களிடம் பேரன்பையும், வரவேற்பையும் பெற்றார். அந்த சீரியலின் ப்ரோமோக்களில், ‘நாங்கள் இந்த சீரியலை பார்ப்பதற்குக் காரணமே வசு தான்’ என பலர் கமெண்டுகளில் தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.