பிக் பாஸ் சீசன் 5 மூலம் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று இருக்கிறார்கள் வருணும் - அக்ஷராவும். இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் ஆகச் சிறந்த நண்பர்களாக வலம் வந்து பலரின் கவனத்தையும் பெற்றனர். பிக் பாஸ் வீட்டின் 1 நாளிலிருந்து இருவரும் எலிமினேட் ஆன நாள் வரை ”ஃபிரண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு” என சுற்றினார்கள்.
இந்நிலையில் தான் கடந்த 2 நாட்களாக வருண் - அக்ஷராவுக்கு திருமணம் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வந்தது. ஆனால் அது உண்மையில்லை. வருண் - அக்ஷரா இருவரும் சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றுக்காக திருமண கான்செப்டில் ஃபோட்டோ ஷூட் ஒன்று நடத்தினர். முஸ்லீம், இந்து, கிறிஸ்டின் வெட்டிங் என்ற கான்செப்டில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் இணையத்தில் திருமணம் என்ற வதந்தியுடன் பரவியது. இந்த புகைப்படங்களை தற்போது அக்ஷரா ரெட்டி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ஆனா சும்மா சொல்ல கூடாது ஜோடி பொருத்தம் சூப்பராகவே இருக்கு என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.