'பிக் பாஸ் தமிழ் 6' புகழ் ஆயிஷா இன்ஸ்டாகிராமில் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிக் பாஸில் கலந்துக் கொண்ட ஆயிஷா 63-வது நாள் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். ஒரு எபிசோடில், கமல் ஹாசனை எதிர்த்து பேசியதால் விமர்சனங்களை எதிர் கொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா, அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து வருகிறார். தற்போது ஆண் நபர் ஒருவரின் முதுகுக்கு பின்னால் இதய வடிவில் கைகளை குவித்துக் காட்டும் படத்தை ஸ்டோரியில் வைத்திருந்தார். அந்தப் பதிவில் ’காத்திருங்கள்’ எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆயிஷா தனது ஆண் நண்பர் குறித்த விஷயத்தை காதலர் தினத்தன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலையைப் பொறுத்தவரை சத்யா சீரியலில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானார் ஆயிஷா. தற்போது புதிய சீரியலில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.