ரசிகர்கள் தொடர்ந்து ஓவியாவிடம் நிறைய படங்களை எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஓவியா திடீரென்று சின்னத்திரை பக்கம் கவனத்தை செலுத்தியுள்ளார். கூடிய விரைவில் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ள டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் ஓவியா நடுவராக இடம் பெறுகிறார் என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் ஷூட்டிங் முடிந்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பாபா பாஸ்கர் மாஸ்டர், நடிகை சினேகா, நடிகை சங்கீதா ஆகியோரும் உள்ளனர், இவர்களுடன் நடிகை ஓவியாவும் நடுவராக இருக்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.