பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார் நடிகை ரேஷ்மா. 2015 ஆம் ஆண்டு ரிலீஸான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு சில படங்களில் நடித்தார். முன்பே சீரியல்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, தனது படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது தனது கவர்ச்சியான படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன. பாக்யலட்சுமி ரேஷ்மா.