ரசிகர்களின் மனம் கவர்ந்த ஆங்கராக வலம் வருபவர் ரக்ஷன், இவர் கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து கலக்கப்போவது யாரு சீசன் 6 மற்றும் 7-யையும் ரக்ஷன் தான் தொகுத்து வழங்கினார். KPY சாம்பியன்ஸ் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், ஜோடி Fun ஆல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் பங்கேற்றார்.