விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் ப்ரியங்கா. இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், பிபி ஜோடிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
2/ 8
ப்ரியங்கா சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் சமையல் வீடியோ, வெளிநாடு சென்ற வீடியோ என பல வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
3/ 8
சமீபத்தில் ப்ரியங்காவின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவையும் பகிர்ந்திருந்தார். இதில் பாவனி, அமீர் உள்ளிட்டோரும் உடனிருந்தார்கள்.
4/ 8
தொகுப்பாளினியாக டாப்பில் வலம் வந்த ப்ரியங்கா, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ரன்னப் அப்பாக வெற்றிப்பெற்றார்.
5/ 8
தற்போது சூப்பர் சிங்கர், பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியை மிகவும் நகைச்சுவையாக தொகுத்து வழங்கி வருகிறார்.
6/ 8
ப்ரியங்கா எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அம்மா மற்றும் தம்பி பற்றி பேசிக்கொண்டே இருப்பார். இவருக்கு ரோகித் என்ற தம்பி உள்ளார்.
7/ 8
ரோகித்தின் மனைவி கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் ப்ரியங்கா சில நாட்களுக்கு முன்பு புகைப்படம் வெளியிட்டிருந்தார்.
8/ 8
இந்நிலையில் ப்ரியங்காவின் தம்பியான ரோகித்தின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை கையில் வைத்தப்படி போஸ் கொடுத்துள்ளார் ப்ரியங்கா. இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் ப்ரியங்கா அத்தை ஆனதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.