Home » photogallery » entertainment » TELEVISION ALYA MANASA YOUTUBE VIDEO ALYA SANJEEV BIRTHDAY VLOG RELEASED PAPPU BIRTHDAY SURPRISE FAIL AILA ALYA SANJEEV
கணவர் சஞ்சீவின் பிறந்த நாள்.. வருத்தப்பட்ட ஆல்யா மானசா!
கணவர் சஞ்சீவின் பிறந்த நாள் சர்ப்ரைஸ் சொதப்பி விட்டதாக ஆல்யா மானசா வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடி தங்களது யூடியூப்பில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் சஞ்சீவ் பிறந்த நாள் கொண்டாட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
2/ 7
சின்னத்திரையில் கலக்கிய ஆல்யா - சஞ்சீவ் ஜோடி இப்போது யூடியூப்பிலும் தனியாக சேனல் தொடங்கி கலக்கி வருகின்றனர். இவர்கள் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருகிறது.
3/ 7
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு சஞ்சீவ் தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அதற்காக மொத்த குடும்பமும் பாண்டிச்சேரி சென்று இருக்கின்றனர்.
4/ 7
அங்கு சஞ்சீவின் பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாட ஆல்யா நினைத்து இருக்கிறார். அதே போல் சஞ்சீவுக்கு சூப்பராக சர்ப்ரைஸ் பிளான் செய்ய வேண்டும் எனவும் பிளான் போட்டு இருக்கிறார்.
5/ 7
ஆனால் நேரம் இல்லாததால் ஆல்யாவால் சரியாக சர்ப்ரைஸை செய்ய முடியவில்லை. தன்னால் முடிந்த வரை குடும்பத்துடன் சேர்ந்து தங்கி இருந்த ரெசார்டில் பலூன்களை தொங்க விட்டு 12 மணிக்கு சஞ்சீவுக்கு கேக் கட்டிங் செய்துள்ளார்.
6/ 7
சின்ன சர்ப்ரைசாக இருந்தாலும் சஞ்சீவ் பயங்கர ஹாப்பி. ஆனால் ஆல்யா தான் நினைத்த மாதிரி பெரிய சர்ப்ரைஸ் செய்ய முடியவில்லை என சஞ்சீவிடம் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
7/ 7
பப்புவின் பிறந்த நாள் சர்ப்ரைஸ் சொதப்பி விட்டது என டைட்டில் உடன் இந்த வீடியோவை ரிலீஸ் செய்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சஞ்சீவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.