விஜயலட்சுமி - நடிகை விஜயலட்சுமி தமிழ் திரைப்பட இயக்குநரான அகத்தியனின் மகள். 2007-ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயகத்தில் வெளியான சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம் போன்ற திரைப்படங்களில் நடித்ததுள்ளார். தமிழ் தவிர கன்னடம் மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ், மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை, பிக்பாஸ் சீசன் 3 ஆகிய ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார்.
வி.ஜே. பார்வதி - ரேடியோ ஜாக்கி, விடீயோ ஜாக்கியாக பணியாற்றிய அவர், மாடலிங் மற்றும் சினிமாவில் நடிகையாவும் மாறினார். மாணவ பத்திரிக்கையாளராக அறிமுகமாகி பின்னர் நாளைய இயக்குநர் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார். சிவக்குமாரின் சபதம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
லக்ஷ்மி பிரியா - நடிகை, விளையாட்டு வீராங்கனை, மாடல் என பல அவதாரங்களை கொண்டிருக்கும் லக்ஷ்மி பிரியா, மனித வளத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். முன்தினம் பார்த்தேனே திரைப்படத்தில் அறிமுகமான இவர், இதுவரை சுமார் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சுட்ட கதை, கர்ணன், டிக்கெட் ஆகிய படங்களில் இவரின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.
காயத்திரி ரெட்டி - மாடலிங் துறையில் பிரபலமான காயத்திரி ரெட்டி, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் பெமினா போட்டியில் டாப் 10 -ல் இடம்பிடித்தார். வெள்ளித்திரையில், நடிகர் சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் மிகச்சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மிஸ் டேலண்டேட், மிஸ் பேஷன் ஐகான் ஆகிய பட்டங்களையும் வென்றுள்ளார்.
நந்தா- கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர், முன்னாள் மத்திய அமைச்சர் கே.கண்ணப்பனின் பேரன். மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமகமானார். ஈரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், பின்னணி குரல் கலைஞர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையாளராக உள்ளார். நாம் இருவர் என்ற சீரியலின் தயாரிப்பாளர் இவர்.
பிரபல சண்டைக் கலைஞர் பெசண்ட் ரவி. தொழிலபதிபராகவும் உள்ளார். ஆரம்ப காலங்களில் மெக்கானிக்காக இருந்த இவர், பல்வேறு ஆயக்கலைகளைக் கற்றுக்கொண்டு திரைப்பட நடிகராக மாறினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடத்துள்ளார். அனைத்து முன்னணி நடிகர்களுக்கு எதிராகவும் வில்லனாக நடித்துள்ளார்.
விளையாட்டு வீராங்கையான ஐஸ்வர்யா கிருஷ்ணன், மாடலிங்காகவும் உள்ளார். பிட்னஸ் டிரெய்னராக இருக்கும் அவர், வெள்ளித்திரையில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு ஸ்பெஷல் டிரெயினராகவும் பணியாற்றி வருகிறார். 500 மீட்டர் துடுப்பு படகுப் போட்டியில் தேசிய அளவில் ரோவிங் சாம்பியன் பட்டத்தையும் வெற்றி பெற்றுள்ளார்.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர். அட்லியின் இயகத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவான மெகா ஹிட் திரைப்படமான பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரதநாட்டியம் கற்றுக்கொண்டுள்ளார். யூ டியூப் மற்றும் வீடியோ தளங்களில் சின்ன சின்ன வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார்.