

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த முன்னனி நடிகைகளின் தற்போதைய புகைப்படத் தொகுப்பு ( படங்கள் : ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம்)


நயன்தாரா : (பிறப்பு: நவம்பர் 18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்) 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.


இவர் தமிழ், தெலுங்கு மலையாளம் என தற்போது வரை சினிமாவில் தன்னை பிஸியாகவே வளம் வந்து கொண்டு மற்ற இளம் கதாநாயகிகளுக்கும் டஃப் கொடுத்து வருகின்றார்.


சமீரா ரெட்டி : தமிழ் , தெலுங்கு , இந்தி என ஒரு கட்டடத்தில் கொடிகட்டி பரந்த சமீரா ரெட்டி ஆந்திராவை சேர்ந்தவர். இவர் 21-01-2014 அன்று அக்ஷய் வர்டே என்ற தொழில் அதிபரை மணம் புரிந்தார்


தமிழில் இவர் நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் இவருக்கு வெற்றித் திரைப்படமாக அமைந்தது. தற்போது சமீரா குடும்பம், குழந்தைகள் என படு பிசியாக உள்ளார். தினமும் குழந்தைகளுடன் செய்யும் குறும்புத் தனங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார்.


சரண்யா மோகன் : இவர் அதிகமாக மலையாள மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி மற்றும் வெண்ணிலா கபடிகுழு ஆகிய திரைப்படங்களின் மூலம் நன்கு அறியப்படும் நபரானார்


திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்கும் சரண்யா மோகன், தற்போது முழுமையான இல்லத்தரசியாகவும், பரதநாட்டிய ஆசிரியையாகவும் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டுள்ளார். அண்மையில் இவர் சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.


ரம்பா : ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார்.


திருமணத்திற்கு பிறகு டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்குபெற்ற நடிகை ரம்பா தற்போது குடும்பத்தாரோடு பிசியாக உள்ளார்.


சிம்ரன் : நடனத்தால் அசத்தியவர்; நடிப்பால் உருக வைத்தவர் தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர்.