இந்த மாதம் 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல மாநிலங்களில் உள்ள அவரது ரசிகர்கள் அன்னதானம், இரத்ததானம், இலவச போன் என நற்பணிகள் செய்து அசத்தினர்.
2/ 10
இந்த நற்பணிகள் இப்போதும் தொடர்கின்றன.
3/ 10
சென்னையில் மூன்று நாள்களுக்கு இலவச உணவுடன் நாளைக்கு 15 மணி நேரம் நகரை சுற்றி வருவது போல் ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்தனர்.
4/ 10
உணவுத் தேவைப்படுகிறவர்கள் இலவசமாக அதனை பெற்றுக் கொள்ளலாம்.
5/ 10
பல இடங்களில் சூர்யா ரசிகர்கள் இரத்ததானத்தில் ஈடுபட்டனர்.
6/ 10
ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த ரசிகர்களும் அன்னதானம், இரத்ததானம் என அசத்தினர்.
7/ 10
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரசிகர்கள் ஸ்மார்ட் போன் தேவைப்பட்ட மாணவருக்கு இலவசமாக போன் பரிசளித்தனர்.
8/ 10
அந்த மாணவரின் ஆன்லைன் கல்விக்கு இது பெரிதும் உதவும்.
9/ 10
இதில் அசத்தியது சூர்யாவின் பெண் ரசிகைகள். கேரளாவின் கண்ணூர், திருச்சூர் என பல இடங்களில் ரசிகைகள் திரளாகக்கூடி பிறந்தநாளை கொண்டாடியதுடன் அன்னதானம், இரத்ததானம் என்று நற்பணிகள் செய்து ஆச்சரியப்பட வைத்தனர்.
10/ 10
23 ஆம் தேதி பிறந்தநாள் எனினும் இன்றும் சில பகுதிகளில் சூர்யா ரசிகர்களின் நற்பணிகள் தொடர்கின்றன.