என்ஜிகே படத்திற்காக சூர்யாவிற்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்த ரசிகர்கள்!
சூர்யாவின் ’என்ஜிகே’ படத்திற்காக இந்தியாவிலேயே எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு மிக உயரமான கட் அவுட் அமைக்கும் பணியை இன்று பூஜையுடன் தொடங்கிவிட்டனர் சூர்யா ரசிகர்கள்.
சூர்யாவின் ’என்ஜிகே’ படத்திற்காக இந்தியாவிலேயே எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு மிக உயரமான கட் அவுட் அமைக்கும் பணியை இன்று பூஜையுடன் தொடங்கிவிட்டனர் சூர்யா ரசிகர்கள்.
2/ 8
இயக்குநர் செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகும் என்.ஜி.கே படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.
3/ 8
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
4/ 8
முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய இப்படம், வரும் 31-ம் தேதி வெளியாகவுள்ளது.
5/ 8
சூர்யா நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
6/ 8
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இந்திய வரலாற்றில் முதன் முறையாக சூர்யாவுக்கு 200 அடியில் கட் அவுட் வைப்பதற்கான பணியை சூர்யா ரசிகர்கள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளனர்.
7/ 8
அது 200 அடிக்கும் மேலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக விஸ்வாசம் படத்திற்காக தல அஜித்திற்கு 190 அடியில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
8/ 8
இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், சூர்யா ரசிகர்கள் தீவிர வேலையில் ஈடுபட்டுள்ளனர்.