சன் டிவி நடிகைக்கு விரைவில் டும் டும் டும்..! வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட 'சந்திரலேகா' நாயகி.!
Shwetha Bandekar | 37 வயதாகும் சீரியல் நடிகை ஸ்வேதா பன்டேக்கர் தன்னுடைய வருங்கால கணவருடன் எடுத்துக்கொணட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு சில விளம்பர படங்களில் நடித்த ஸ்வேதா பன்டேக்கர் 2007 ஆம் ஆண்டு 'தல' அஜித் நடிப்பில் வெளியான 'ஆழ்வார்' திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.
2/ 9
அதையடுத்து பூவா தலையா, வள்ளுவனும் வாசுகியும், மீரா உடன் கிருஷ்ணன், நான்தான் பாலா, பூலோகம் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார் ஸ்வேதா.
3/ 9
2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகள்’ என்ற தொடரில் நடித்துள்ளார் ஸ்வேதா.
4/ 9
பிறகு சன் டிவியில் ஒளிப்பரப்பான 'சந்திரலேகா' சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா பன்டேக்கர்.
5/ 9
'சந்திரலேகா' சீரியலில் சந்திரா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்வேதா பன்டேக்கர் பொறியியல் பட்டதாரி ஆவார்.
6/ 9
2014 ஆம் ஆண்டு தொடங்கிய ஏ.பி.ராஜேந்திரன் இயக்கிய 'சந்திரலேகா' தொடரானது 8 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
7/ 9
இந்நிலையில் ஸ்வேதா தான் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
8/ 9
அவர் பகிர்ந்துள்ள அந்த பதிவில் 'என் இதயம் நீண்ட காலமாக காணவில்லை, இறுதியாக என் இதயத்தை கண்டுபிடித்துவிட்டேன்.. கடவுளுக்கு நன்றி!' என்று குறிப்பிட்டுள்ளார்.
9/ 9
இந்த பதிவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சுவேதாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.