படப்பிடிப்புக்கு சரிவர வருவதில்லை, சிம்பு தயாரிப்பாளர்களை இழுத்தடிப்பார், ஒரு படம் முடிக்க இரண்டு வருடங்கள் எடுத்துக் கொள்வார் என்று தன்னைப் பற்றி பல்வேறு தகவல்கள் கோலிவுட்டில் வலம் வரும் நிலையில் 40 நாட்களில் முழுப்படத்தையும் முடித்து கொடுத்து அவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சிம்பு.
அதிரடியாக உடலைக் குறைத்து, 40 நாட்களில் ‘ஈஸ்வரன்’ படத்தை முடித்துக் கொடுத்த சிம்புவின் அர்ப்பணிப்பை பார்த்து வாய் மேல் விரல் வைத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். மேலும் தொடர்ந்து இதேபோல் திரைப்படங்களில் சிம்பு கவனம் செலுத்த வேண்டும் என்று தங்களது எண்ணத்தை ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வரும் ரசிகர்கள், தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ‘ஈஸ்வரன்’ டீசரை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.