நடிகை ஸ்ருதிஹாசன் இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1992-ம் ஆண்டு வெளியான தேவர் மகனில் ‘போற்றிப் பாடடி பொண்ணே’ பாடலின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் பின்னணி பாடகியாக வலம் வந்த ஸ்ருதிஹாசன் பின்னர் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். கமல்ஹாசனின் ‘ஹே ராம்’ தொடங்கி தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன் தமிழில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் ‘லாபம்’ திரைப்படம் இந்த ஆண்டு திரைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் இன்று தனது 35-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் ஸ்ருதிஹாசனுக்கு திரைபிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்