அஜித் பட இயக்குநரின் இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நாயகனாக நடிக்கிறார்.
2/ 7
சரவணனுக்கு ஜோடியாக அறிமுக நாயகி கீர்த்திகா திவாரி நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார்.
3/ 7
புரொடக்ஷன் நம்பர் 1 என்ற தற்காலிக பெயரில் பூஜையுடன் இன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் தயாரித்து நடிக்கும் இந்தப் படத்தை ஜேடி -ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கெனவே உல்லாசம், விசில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்கள்.
4/ 7
இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
5/ 7
படத்தின் முக்கிய கதபாத்திரங்களில் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
6/ 7
படத்தின் முதல் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகர் படத்துக்கு வசனம் எழுதுகிறார்.
7/ 7
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, இமயமலை மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.