2000களில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானர் நடிகை கீர்த்தி சுரேஷ். 2013 ஆண்டில் 'கீதாஞ்சலி' எனும் திரைப்படத்தின் மூலமாக மலையாளத் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். அதையடுத்து சிவகார்த்திகேயன் உடன் நடித்த 'ரஜினி முருகன்' படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் நடித்த 'அண்ணாத்த', மோகன்லாலுடன் 'மரக்காயர்' ஆகிய படங்கள் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது செல்வராகவனுடன் இவர் நடித்துள்ள 'சாணிக் காகிதம்' திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. ராக்கி படத்தில் அறிமுகமான இயக்குனர் மாதேஸ்வரன் இயக்கிய இந்த படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வரத்தொடங்கியுள்ளன. வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும், சாணி காயிதத்தில் வைலன்சும், இரத்த சிதறல்களும் அதிகமாக உள்ளன. இவர் நடித்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமானது தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரிலும் வெளியானது. பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பாத்திரத்தில் "மகாநடி" திரைப்படத்தில் நடித்தமைக்காக இவருக்கு 2018 ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் கீர்த்தி கோட் சூட்டில் அவர் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 12.7 மில்லியன் பேர் பின்தொடருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் (Image : Instagram @keerthysureshofficial)